டெல்லியில் 10 ஆயிரம் டுபாக்கூர் கால்சென்டர்கள் .. போலீஸ் 'திடுக்' தகவல்

 10 000 Fake Call Centres Running Delhi டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் சுமார் 10 ஆயிரம் போலி கால்சென்டர்கள் இயங்கி வருவதாக டெல்லி போலீஸ் துணை கமிஷனர் எஸ்.பி.எஸ். தியாகி தெரிவித்துள்ளார். "டெல்லியில் இயங்கும் 10 ஆயிரம் போலி கால்சென்டர்கள் மூலம் ஒரு நாளைக்கு உள்நாட்டுக்கும் வெளிநாட்டுக்குமாக சுமார் 2 லட்சம் தொலைபேசி அழைப்புகள் செல்கின்றன. இந்த கால்சென்டர்கள் பதிவு செய்யப்படாதவை மட்டுமின்றி.. கணக்கில் காட்டாத பணத்தையும் வைத்திருக்கின்றன. எங்களுக்கு இதுதொடர்பாக தகவல்கள் கிடைத்தால் நாங்கள் ரெய்டு நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நேற்று நாங்கள் ஐந்து பேரை கைது செய்திருக்கிறோம். உத்திரவாதமற்ற கடன்கள் மற்றும் இன்சூரன்ஸ் பெற்றுத் தருவதாகக் கூறியே இந்த டுபாக்கூர் கால்சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன" என்றும் அவர் கூறியுள்ளார்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: