விண்டோஸ் 8 பற்றிய விரிவான தகவல்கள்


 நம்மில் பெரும்பாலானோர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் தான் பயன்படுத்துகிறோம். இதில் பல்வேறு பதிப்புகள் இருப்பது அனைவரும் அறிந்ததே! அதாவது விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7.

 நீங்கள் விண்டோஸ் பழைய பதிப்புகளை பயன்படுத்துபவரானால் இதைக்கொஞ்சம் பாருங்க. விண்டோஸ் 8-ஆனது பல்வேறு சிறப்பம்சங்களுடனும் அதிவிரைவாக செயல்படும் வகையிலும் வெளியாகியுள்ளது.
.
1)விண்டோஸ் 8 ஓர் அறிமுகம்:
விண்டோஸ் 8-ஆனது கடந்த வருடம் அக்டோபர் 26 ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த இயங்குதளத்தில் மூன்று வகையானவை உள்ளன. அவை,
 விண்டோஸ் 8: இதுவொரு சாதாரணமாக பயன்படுத்தும் வகையிலான இயங்குதளம். இந்த பதிப்பு வீட்டுக்கணினிகள் மற்றும் இண்டெல் ப்ராசெசர் பயன்படுத்தும் மடிக்கணினிகள் உபயோகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
விண்டோஸ் 8 ப்ரோ: இது வியாபார நோக்கங்களுக்காக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியான பாதுகாப்பு கூறுகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலுமிது பெரிய நிறுவனங்களுக்காக பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டது. நீங்கள் ஏற்கனவே விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்தினால் இதற்கு அப்கிரேட் செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது.
 விண்டோஸ் RT: இது டேப்லெட்களில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இயங்குதளமாகும். RT என்றால் ‘ரன் டைம்’ என்று பொருள்.
2)விண்டோஸ் 8 ஒரு ‘அந்நியன்’:
அதாவது விண்டோஸ் 8 இயங்குதளம் ‘அந்நியன்’ பட விக்ரமைப்போன்று ஸ்ப்லிட் பெர்சனாலிட்டி கொண்டது. அதாவது ஒரே நேரத்தில் பல்வேறு செயல்களை செய்யமுடியும் மற்றும் ஒரே நேரத்தில் இருவேறு பதிப்புகளை பயன்படுத்தலாம்.
தெளிவாக இங்கே: முதல் – இது அழகானது, தொடுதலை உணர்ந்து அதற்கேற்றாற்போல் செயல்படக்கூடியது. இதில் 10,000 மேலான ஏற்கெனவே உருவாக்கப்பட்ட அப்ளிகேசன்கள் உள்ளன.
 இரண்டாவது – இது அனைவருக்கும் தெரிந்த பழைய மாதிரி பதிப்பே தான் இருந்தாலும் மெருகேற்றப்பட்டுள்ளது எனலாம். இதை ஸ்டார்ட் பொத்தான் அழுத்தி ஒரு திரையிலிருந்து மற்றொன்றிற்கு செல்லமுடியும்.
 3) தொடுதிரை தேவையில்லை:
இந்த விண்டோஸ் 8 இயங்குதளத்தை பயன்படுத்துவதற்கு தொடுதிரை தேவையில்லை. இதை தொடுதிரை இல்லாமலும் பயன்படுத்தலாம். நீங்கள் தொடுதிரைகொண்ட கணினியை பயன்படுத்த வேண்டுமெனில் விண்டோஸ் 8க்கு மாறுங்கள்.


4) ‘ஸ்டார்ட்’ மெனு இல்லை:
ஆம் நண்பா! இந்த விண்டோஸ் 8 இயங்குதளத்தில் ஸ்டார்ட் என்ற மெனு இல்லவே இல்லை. அந்த பொத்தானை அழுத்தினால் தொடுதிரை பதிப்பிற்கு சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 ஆனால் தேவையான அனைத்தும் தனித்தனி அப்ளிகேசன்களாக தரப்பட்டுள்ளன என்பதே இதன் தனிச்சிறப்பு. பயன்படுத்த மிகவும் சுலபமானது.
 5) பழையதும் சப்போர்ட் ஆகும்:
உங்களுடைய பழைய விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படும் அனைத்து மென்பொருள்களும் இதிலும் இயல்பாகவே செயல்படும். எந்த சிரமும் ஏற்ப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில சிரமம் தருமென்பாதை நினைவில் கொள்க!

6) விண்டோஸ் 7க்கு சரினா எனக்கும் சரிதான்:
விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இயங்கும் எந்த கணினியும் விண்டோஸ் 8 சப்போர்ட் செய்யக்கூடியது.
 7) விண்டோஸ் 8 பிடிக்கவில்லையா கவலைய விடுங்க!
விண்டோஸ் 8 உபயோகிப்பதிலும், செயல் திறனிலும் எந்த சிரமும் இல்லை. அப்படி ஏதாவது இருக்குமென நீங்கள் நினைத்தாலோ அல்லது பணம் முக்கிய காரணியாக இருந்தாலோ விண்டோஸ் 8க்கு மாறத்தேவையில்லை.
 விண்டோஸ் 7க்கான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பங்களிப்பானது பிப்ரவரி 2020 வரை இருக்குமென அந்நிறுவனமே தெரிவித்துள்ளது. எனவே கவலைய விடுங்க!



8) புதுமை பிடிக்கும்…விண்டோஸ் 8 வேணும்!
உங்களுக்கு விண்டோஸ் 8 பிடித்திருக்கிறது எனில் தாமதம் வேண்டாம். உடனே மாறுங்கள் விண்டோஸ் 8க்கு. அதுவும் நீங்கள் விண்டோஸ் 7 பயனாளராக இருந்தால் ரூ.2,000 செலவில் அப்கிரேட் செய்துகொள்ளலாம்.

புதிதாக வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்துங்கள்.

அப்கிரேட் செய்வதற்கு முதலில் ஒரு மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவவேண்டும். மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து இதைப்பெற 






Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: