அஸ்ஸாம் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சில்சார் நகர் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 20ம் தேதி காலை 4 மணிக்கு தனது வீட்டுக்கு வெளியே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறைக்கு சென்றவர் வெகுநேரமாகியும் வராததால் பெற்றோர் அவரை தேடிச் சென்றனர்.
ஆனால் அவரைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சில மணி நேரம் கழித்து அம்மாணவி வீட்டில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள ரயில் நிலையத்திற்கு வெளியே மயங்கிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மயக்கம் தெளிந்த பிறகு அவர் போலீசாரிடம் கூறுகையில், கழிவறைக்கு சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் தன்னை கடத்தியதாகவும். அதில் ஒருவர் தனது முகத்தில் ஸ்ப்ரே அடித்தவுடன் மயங்கிவிட்டேன். அதில் ஒருவர் எங்கள் பகுதியைச் சேர்ந்த ராஜிப் போர்லஸ்கார் என்றார்.
மாணவியை பரிசோதித்ததில் அவர் கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜிபை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இதையடுத்து ராஜிப் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதில், தான் ஒரு ஹெச்.ஐ.வி. நோயாளி என்றும், சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் தனக்கு ஜாமீன் அளிக்குமாறும் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் அளிக்க மறுத்த நீதிமன்றம் அவரை சிறையில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்குமாறு தெரிவித்துள்ளது.