கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து எல்.கே.ஜி மாணவி பலியான சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் உள்ளிட்ட 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வசிக்கும் வெங்கடேசன்-பவித்ரா தம்பதியினர் மகள் மாலதி. அருகில் உள்ள சி.எம்.எஸ் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தார். மாணவி மாலதி நேற்று காலை 11 மணி அளவில் விடப்பட்ட இடைவேளைக்குப் பிறகு காணாமல் போயிருக்கிறார். இதனையடுத்து ஆசிரியர்கள் தேடியிருக்கின்றனர். அப்போது பள்ளி வளாகத்திற்குள் திறந்திருந்த கழிவுநீர் தொட்டிக்குள் மாணவியின் சடலத்தை கண்டெடுத்தனர். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, தீயணைப்பு படையினருடன் வந்து மாணவி மாலதியை மீட்டனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகிகளை கைது செய்யக்கோரி பெற்றோர்களும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பள்ளி தாளாளர் ஸ்டீபன் தாஸ், அவரது சகோதரியும் பள்ளி முதல்வருமான மெர்ஸி, அவரின் கணவர் கே.பிரபாகரன், உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மராமத்து பணிகள் மேற்கொள்ள சமீபத்தில் தான் செப்டிக் டேங்கை திறந்தோம் என்று பள்ளி நிர்வாகிகள் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரை ஊத்தங்கரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.ஊத்தங்கரையில் பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து மாணவி பலி: தாளாளர் உள்பட 4 பேர் கைது
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து எல்.கே.ஜி மாணவி பலியான சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் உள்ளிட்ட 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வசிக்கும் வெங்கடேசன்-பவித்ரா தம்பதியினர் மகள் மாலதி. அருகில் உள்ள சி.எம்.எஸ் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தார். மாணவி மாலதி நேற்று காலை 11 மணி அளவில் விடப்பட்ட இடைவேளைக்குப் பிறகு காணாமல் போயிருக்கிறார். இதனையடுத்து ஆசிரியர்கள் தேடியிருக்கின்றனர். அப்போது பள்ளி வளாகத்திற்குள் திறந்திருந்த கழிவுநீர் தொட்டிக்குள் மாணவியின் சடலத்தை கண்டெடுத்தனர். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, தீயணைப்பு படையினருடன் வந்து மாணவி மாலதியை மீட்டனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகிகளை கைது செய்யக்கோரி பெற்றோர்களும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பள்ளி தாளாளர் ஸ்டீபன் தாஸ், அவரது சகோதரியும் பள்ளி முதல்வருமான மெர்ஸி, அவரின் கணவர் கே.பிரபாகரன், உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மராமத்து பணிகள் மேற்கொள்ள சமீபத்தில் தான் செப்டிக் டேங்கை திறந்தோம் என்று பள்ளி நிர்வாகிகள் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரை ஊத்தங்கரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.