மாலியில் பிரான்சு ராணுவம் தரை வழி தாக்குதலை துவக்கியது !











பமாகோ:மாலியில் இஸ்லாமிய போராளிகள் மீது பிரான்சு நாட்டு ராணுவம் தரை வழி தாக்குதலை துவக்கியுள்ளது. போராளிகள் கைப்பற்றிய தியாபாலி நகரத்தில் உள்நாட்டு ராணுவத்துடன் பிரான்சு ராணுவமும் தரை வழி தாக்குதலை துவக்கியுள்ளது. பிரான்சின் ஏராளமான ராணுவ டாங்குகள் இந்நகரத்திற்கு வந்துள்ளன. தலைநகரில் இருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள தியாபாலியை கடந்த திங்கள்கிழமை போராளிகள் கைப்பற்றினர். போராளிகளின் மையங்களில் நேற்றும் பிரான்சு ராணுவம்
வலுவான தாக்குதலை நடத்தியது. வடக்கு பகுதியில் தங்களின் தரைப்படை முன்னேறுவதாக பிரான்சு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தியாபாலியில் பிரான்சு நாட்டு ராணுவம் அதிகமான நெருக்கடிகளை சந்திக்கவேண்டிவரும் என்று எ.எஃப்.பி கூறுகிறது. வீதிகளில் போராளிகள் இரவு தாமதமாக பின்வாங்கியுள்ளனர். சிறுக் குழுக்களாக தாக்குதல் நடத்துவதுதான் அவர்களது திட்டம் என்று பிரான்சு கமாண்டர் கூறுகிறார். மத்திய நகரமான கோன்னா தற்போதும் போராளிகளின் வசம் இருப்பதாகஅவர் உறுதிச் செய்தார். இரண்டு நகரங்களை மீட்பதே தங்களது லட்சியம் என்று அவர் தெரிவித்தார்.
2500 பிரான்சு ராணுவத்தினர் உடனடியாக மாலிக்கு வருகை தருவர். தற்போது 800க்கும் மேற்பட்ட பிரான்சு ராணுவத்தினர் மாலியில் உள்ளனர். 190 நைஜீரியா ராணுவத்தினர் மாலிக்கு நேற்று வந்தனர். 900 ராணுவ வீரர்களை அனுப்பப் போவதாக நைஜீரியா அறிவித்துள்ளது.
பெனின், கானா, நைஜர், செனகல், புர்கினா ஃபாஸா, டோகோ ஆகிய ஆப்பிரிக்க நாடுகள் பிரான்சு ராணுவத்திற்கு உதவ படை வீரர்களை அனுப்பப் போவதாக அறிவித்துள்ளன.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: