ஆஸ்திரேலியாவிலிருந்து பப்புவா நியூகினியா நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தின் இறக்கையில் 12 அடிகள் நீளமான பைத்தன் பாம்பு ஒன்றும் பயணம் செய்து கொண்டிருந்ததை விமானத்திலிருந்த பயணிகள் படம் பிடித்துள்ளனர்.
ஒரு மணி நேரத்திற்கு சுமார் 500 மைல்கள் என்ற வேகத்தில் 30,000 அடிகள் உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் எவ்வித ஆபத்துக்களும் இன்றி தனது பயணத்தை தொடர்ந்த பாம்பானது பப்புவா நியுகினியாவில் தரையிறங்கியுள்ளது.