ஹிந்துத்துவ பெண் பயங்கரவாதிக்கு புற்று நோய் !












மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்திலுள்ள மாலேகானில், 2008ல், குண்டு வெடிப்பு நிகழ்ந்தது... இந்த குண்டுவெடிப்பு வழக்கில் தீவிர ஹிந்துத்துவ இயக்கங்களின் தொடர்பைத் ஹேமந்த் கார்கரே கண்டுபிடித்ததன் பின்னர், நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளிலும் ஹிந்து பயங்கரவாத இயக்கங்களின் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு, பெண் சாமியார் சாத்வி ப்ரக்யா சிங் தாகூர் இந்திய ராணுவ லெப்டினண்ட் கர்னல் புரோஹித் உதவியுடன் செய்த நாசகாரவேலை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பெண் சாமியார் சாத்வி ப்ரக்யா சிங், அதன்பிறகு பல கொலை வழக்குகளிலும் கைது செய்யப்பட்டார். குண்டுவெடிப்புகளின் மூளையாக செயல்பட்ட ஹிந்துத்துவ தீவிரவாதி சுனில் ஜோஷி கொலையிலும் பெண் சாமியார் சாத்வி ப்ரக்யா சிங் தாகூர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுனில் ஜோஷி கொலை வழக்கு விசாரணைக்காக மும்பையிலிருந்து போபாலுக்கு அழைத்து செல்லப்பட்ட சாத்வி ப்ரக்யா சிங் தாகூருக்கு,  ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் மார்பக சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் அவருக்கு மார்பக புற்று நோய் இருப்பது உறுதியானது.

பெண் சாமியார் சாத்வி ப்ரக்யா சிங்கை உள்நோயாளியாக அனுமதியாகுமாறு மருத்துவர்கள், அறிவுறுத்தினர், அதற்கு உடன்பட மறுத்த அவர் மத சடங்குகள் சிலவற்றை மேற்கொண்ட பிறகே உள்நோயாளியாக அனுமதி ஆவப்போவதாக தெரிவித்தார்..

இது தொடர்பாக கருத்து தெரிவித்த போபால் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் பட்டேல், சாத்வி ப்ரக்யா சிங், ஒப்புதல் இன்றி தங்களால் அவரை உள்நோயாளியாக அனுமதிக்க முடியாது 
என்றார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: