கின்னஸ் சாதனைப் படைத்த இந்திய திருமண ஆல்பம்




திருமண ஒப்பந்த நிறுவனமான பாரத் மேட்ரி மோனியல் சார்பில் திருமண ஆல்பம் ஒன்று தயாரிக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேட்ரி மோனியல் நிறுவனரும் தலைமை செயற்இயக்குனருமான ஜானகிராம் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ம் திகதி மேட்ரி மோனியல் தினம் ‌கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு வித்தியாசமாக கொண்டாடப்பட வேண்டு மென தீர்மானிக்கப்பட்டது. இதற்காக 15 பேர் ‌கொண்ட குழுவினர் சுமார் ஆயிரத்து 600 மணி நேரம் செலவழிக்கப்பட்டு இரண்டு வார கால உழைப்பில் இவை தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாரத் மேட்ரி மோனியல் நிறுவனம் மூலம் திருமணமானவர்கள் மட்டுமே கலந்த கொள்ள வேண்டும் என நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டது. மொத்தம் 12 ஆயிரத்து 288 ஆல்பங்கள் பெறப்பட்டு 256 ஆல்பங்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டது.
16 பக்கங்களுடன் ஆயிரம் கிலோ எடையுடன் 4 ஆயிரத்து 300 சதுர அடி பரப்பளவுடன் 13 அகலம் மற்றும் 17 அடி நீளத்துடன் இந்த திருமண ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. 
கடந்த 2008ம் ஆண்டு  ஜின்   10ம் திகதி தயாரிக்கபட்ட ஜான்சன்ஸ் பேபி ஆல்பமே சாதனையாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: