விமானத்தின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால் 2 பயணிகளை மட்டும் உட்கார வைக்க முடியவில்லை. இதையடுத்து என்ன செய்வது என்று யோசித்த விமானிக்கு வித்தியாசமான யோசனை தோன்றியுள்ளது. அந்த இரண்டு பேரையும் விமான கழிவறையில் அமர்ந்து வருமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் சரி என்று கூறி உள்ளே போய் உட்கார்ந்து கொண்டனராம். நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ நிறுவனத்தை சரிசெய்ய பாகிஸ்தான் அரசு கடுமையாக முயன்று வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்குமாறு விமான நிறுவனத்தை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. |
விமானத்தில் இடம் இல்லாததால் கழிவறையில் அமர்ந்து பயணம்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail