உறை பனிக்குள் சிக்கியவர் 2 மாதங்களுக்கு பின் உயிருடன் மீட்பு


சுவீடன் நாட்டில் காருடன் உறை பனிக்குள் சிக்கி உயிருக்கு போராடிய நபர் 2 மாதங்களுக்குப் பின் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி வடக்கு சுவீடன் பகுதியில் 45 வயதுடைய நபர் ஒருவர் காரில் சென்றார். அப்போது சாலையில் இருந்து பாதை மாறி சென்ற கார் 1 கிலோ மீ்ற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதிக்குள் சிக்கியது.
அங்கு கடும் பனி கொட்டியதால் கார் முழுவதும் பனியால் மூடப்பட்டது. காருக்குள் சிக்கிய அவர் உணவு கூட இல்லாமல், பனிக்கட்டியையும் உருகும் ஐஸ் தண்ணீரையும் பருகியே 2 மாதங்கள் உயிர் பிழைத்துள்ளார்.
இந்நிலையில் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் இவரை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: