சொக்லேட் சாப்பிட்டதற்கு தண்டனை பெற்ற சிறுமி பரிதாப மரணம்



சொக்லேட் சாப்பிட்டதற்கு தண்டனையாக நிற்காமல் 3 மணி நேரம் ஓடிய சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
அமெரிக்காவின் அலபாமா பகுதியைச் சேர்ந்த சிறுமி சவன்னா ஹார்டின்(9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறாள். அவளது மாற்றான் தாய் ஜெசிகா மே ஹார்டின்(27), பாட்டி ஜாய்ஸ் ஹார்டின் காரட்(47) ஆவர்.
கடந்த வெள்ளிக்கிழமை சிறுமி சவன்னா சொக்லேட் சாப்பிட்டு விட்டு பாட்டியிடம் இல்லை என்று பொய் சொல்லியிருக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த ஜெசிகாவும், ஜாய்ஸும் சவன்னாவை 3 மணிநேரம் நிற்காமல் ஓடச் செய்துள்ளனர்.
ஓடி, ஓடி கலைத்த சிறுமி இறுதியில் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் ஜெசிகா மற்றும் ஜாய்ஸை கைது செய்தனர். சவன்னாவை மிரட்டி ஓடச் செய்தார்களா அல்லது அடித்து ஓட விட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: