குவைத்தில் பனி பெண்ணை சித்ரவதை செய்து கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை !

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
 பிலிப்பைன்சை சேர்ந்த வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்து கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு குவைத் கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், குவைத்தில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். அந்த வீட்டின் உரிமையாளர் மாற்று திறனாளி. அவரும் அவரது மனைவியும் சேர்ந்து வேலைக்கார பெண்ணை கொடுமை செய்து வந்துள்ளனர். திடீரென ஒருநாள் வேலைக்கார பெண் மர்மமான முறையில் மாயமானார். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், அந்த தம்பதியின் மகன் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் கொடுத்தார். ‘‘என் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வேலைக்கார பெண்ணை கொடுமைப்படுத்தினர். தினமும் அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். இதில் அவளது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவளை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதாக கூறி காரில் அழைத்து சென்றார்கள். அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை’’ என போலீசில் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். காரில் அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிக்கு தம்பதி சென்றுள்ளனர் அங்கு போனதும், ஓடும் காரில் இருந்து அந்த பெண்ணை உதைத்து கீழே தள்ளினர். பின்னர், உயிருக்கு போராடிய அவர் மீது பலமுறை காரை ஏற்றி சாகடித்திருக்கின்றனர் என்று விசாரணையில் தெரியவந்தது.
சித்ரவதை செய்து கொடூரமாக ஒரு பெண்ணை கொலை செய்த தம்பதிக்கு குவைத் கிரிமினல் கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: