புனித நூலான குர் ஆணை எரித்ததற்கு எதிராக போராடிய ஆப்கன் மக்களை சுட்டு கொன்ற அமெரிக்க படையினர் !


காபூல் : ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோவின் படை தளத்தில் முஸ்லீம்களின் புனித நூலாகிய குரான் எரிக்கப்பட்ட செய்தி வெளியானதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் மக்கள் போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது. இன்று நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 6 நபர்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளின் முக்கிய தளமான பக்ராம் விமான தளத்தில் குப்பை பெருக்கும் ஆப்கானியர்கள் குப்பை பெருக்கும் போது எரிக்கப்பட்டகுரானின் தாள்களை கண்டனர். இச்செய்தி வெளியானவுடன் அமெரிக்க படையினர் சார்பில் விசாரணை நடத்தி குரான் எரிக்கப்பட்டது உண்மை என்றும் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் அறிவித்தனர். 

ஆனால் அமெரிக்கர்களின் மன்னிப்பை ஏற்று கொள்ளாத ஆப்கான் மக்கள் இரண்டு நாட்களாக வீதிகளில் போராட்டங்களை நடத்தினர்.  அமெரிக்க படைகளுக்கு உதவியாக உள்ள மேற்குலக செக்யூரிட்டிகள் தான் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இது குறித்த முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் ஆப்கான் அரசு அறிவித்துள்ளது. 

போராட்டத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் தாலிபான் தலைவர் முல்லா முஹம்மது உமரை வாழ்த்தி கோஷங்கள் போட்டதோடு தாலிபானின் வெள்ளை கொடியையும் ஏந்தி சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் குரானை எரித்தவர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்றும் முழங்கினர்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: