சென்னை, பிப். 22 : சென்னையில் அடுத்தடுத்து வங்கிகளில் நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவங்களை அடுத்து அனைத்து வங்கிகளும் காமிரா கண்காணிப்பு பொருத்தப்படும் என்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி கூறியுள்ளார்.சென்னையில் தொடர் கொள்ளை சம்பவங்களைத் தொடர்ந்து செய்தியர்களைச் சந்தித்த ஆணையர் திரிபாதி, கொள்ளைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க தனிக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவர்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.வங்கிகள் அனைத்தும், காமிரா வசதி செய்யப்பட்டு அவை உள்ளூர் காவல்நிலையங்களுடன் இணைக்கப்படும். மேலும், அனைத்து வங்கிகளும், காவல்துறை ஆணைய அலுவலகத்துடன் தொடர்பில் இருக்குமாறு ஹாட்லைன் வசதி செய்யப்படும்.வங்கிக் கொள்ளையர்கள் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் 99520 91100, 98408 14110 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு துப்பு அளிக்கலாம். சரியான தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.கொள்ளையர்களைப் பிடிக்க 40 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் திரிபாதி தெரிவித்தார்.