துபாய் முஸ்லீம் நாடா? ஒரு பிரபல பதிவரின் பார்வையில்


துபாயில் வசிக்கும் ஒரு பிரபல இந்திய பதிவர். துபாய் பற்றி எழுதிய ஒரு கட்டுரையே இது..துபாய் ஒரு முஸ்லீம் நாடு என்று சொல்லபடுகின்றது.  ஆனால் அங்கு நடை முறையில் இருக்கும் சில விசயங்களை பார்க்கும்  பொழுது துபாய் ஒரு முஸ்லீம் நாடுதானா என்பதில் எனக்கு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடிய வில்லை.எனக்கு தெரிந்தவகையில் முஸ்லீம்களின் உடை என்பது முகம் கை கரண்டைக்கால் அதாவது பாதம் தவிர்த்து மற்ற பகுதிகளை மறைத்துக் கொள்ளும்
வகையில் அவர்களின் உடையை அமைத்து கொள்ள வேண்டும்.
பெண்களாக இருந்தால் முகம் கை தவிர்த்து மற்ற பகுதிகளை மறைத்து கொள்ள வேண்டும். அது எந்த மாதிரியான உடையாகவும் இருக்கலாம். ஆனால் மேற்கூறிய அளவில் அந்த உடை இருக்க வேண்டும். எனக்கு தெரிந்த உடை கட்டுப்பாடை கூறியுள்ளேன்.  இதில் ஏதேனும் தவறு இருக்கும்பட்சத்தில் தெரிந்தவர்கள் கூறலாம் நான் திருத்தி கொள்கின்றேன்.
அந்த வகையில் லுங்கி (சாரம்) என்பது முஸ்லீம் மதம் வித்திதிருக்கும் உடை குறித்த அளவுகோலில் அடங்க கூடியதுதான். தமிழகத்தில் மற்றும் இலங்கையில்  சாரம்  என்பது முஸ்லீம்களின் ஒரு அடையாளம் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது.  தமிழர்கள் உடுத்துவதால் அதை முஸ்லீம்களின் உடை என்று சொல்ல வில்லை இஸ்லாம் சொன்ன அளவுகோலின்படிதான்  சாரம்   உள்ளது. அந்த வகையில் சாரம் உடுத்த இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை என்பது விளங்குகின்றது. 
கடந்த வெள்ளி கிழமை நண்பரை பார்பதற்காக துபாயில் உள்ள ஜுமைரா என்னும் இடத்திற்கு சென்றிருந்தேன். நண்பரை அவரின் அறையில் சந்தித்து பேசிவிட்டு கடற்கரையில் சிறிது நேரம் நடந்து விட்டு வரலாம் என நானும் நண்பரும் தயாரானோம்.
அப்பொழுது லுங்கியில் இருந்த நண்பர் டவுசருக்கு மாறினார். கடற்க்கரை அருகில் தானே இருக்கிறது இதற்க்கு என் உடை  மாற்றுகின்றீர்கள் என கேட்டதற்கு நேற்று இரவு அவருடைய நண்பர் (அவரும் முஸ்லீம் தான்) அருகில் இருக்கும் கடைக்கு    சென்றிறூகின்றார்.
சாரத்துடன் சென்றனமைக்காக அவருக்கு துபாய் கவல் துறையினர் இருனூறு திர்ஹம் அபராதம் வித்திதுள்ளனர். அதே நேரத்தில் அவர் களுக்கு எதிர்புறம் உள்ள கடற்கரையில் வெள்ளை காரர்கள் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனவரும் உள்ளாடையுடன் திரிந்து கொண்டு இருகின்றனர். அவர்களுக்கு எந்த கட்டுப்பாடையும் துபாய் காவல் துறையினர் விதிப்பது இல்லை. உள்ளாடையை விட எந்த விதத்தில் லுங்கி தரக்குரைவான உடையாக இருக்க முடியும்.
அங்கே உள்ளடையுடன் துற்றி திரியும் அவர்கள் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள். பெரும் பனக்காரர்கள்.
ஆனால் லுங்கியுடன் இருக்கும் இவர்கள் தெற்காசியர்கள் பிழைப்பு தேடி இங்கு வந்திருகின்றார்கள். அதான் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் ஏழைகள் என்பதால் இவர்களுக்கு ஒரு சட்டமா? தீர்ப்பு வழங்கும் பொழுது இருவரில் ஒருவருக்கு அநியாயம் செய்ய வேண்டாம் எனதானே இஸ்லாம் கூருகின்றது.
ஆனால் இங்கு இவர்கள் வழங்கும் தீர்ப்பு தவறு செய்த இருவரில் ஒருவருக்கு அநியாயம் மற்றுமில்ல்லை . தவறு செய்தவரை விட்டு விட்டு தவறு செய்யாதவருக்கு தண்டனை கொடுபது என்ன நியாயம்.
அப்படி என்றால் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு ஒரு சட்டமா? இஸ்லாம் தீர்ப்பு வழங்கும் விசயத்தில் இப்படித்தான் நடந்து கொள்ள சொல்லி இருக்கின்றதா.
துபாய் உன்மையில் இஸ்லாம் நாடுதானா?    
thanks to  asiananban
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: