டெல்லி: நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் நாளை ஸ்டிரைக்கில் குதிக்கின்றன. கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதால் வங்கிப் பணிகள், ஏடிஎம் சேவை உள்ளிட்டவை பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த வங்கிப் பணியாளர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வங்கிகளில் நிலுவையில் உள்ள வாராக் கடன்களை வசூலிக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும், வங்கிப் பணிகளில் அவுட்சோர்சிங் முறை கூடாது, வங்கிகள் சீரமைப்பு தொடர்பான காந்தல்வால் கமிட்டியின் பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஸ்டிரைக் நடக்கிறது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக வங்கிப் பணிகள், ஏடிஎம் சேவை, காசோலை மாற்றம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.