நீண்ட வால், குட்டையான கால்களுடன் திகழும் இதன் மேல்புறத் தோல் சூரிய வெளிச்சத்தில் வானவில் நிறத்தில் ஜொலிக்கிறது. இந்த அபூர்வ இன பல்லி கம்போடியாவில் உள்ள ரடனாக்கிரி மாகாணத்தில் இயற்கை ஆர்வலர்களால் கண்டறியப்பட்டது. இதற்கு லிகோ சோமா வென் சாயன்சிஸ் என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். ![]() கடந்த 2010-ம் ஆண்டு மிகவும் ஒதுக்குபுறமான பகுதியில் இந்த பல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பொதுவாக இவை பூமிக்கு அடியில் பதுங்கி வாழ்கின்றன. இதே போன்று புதிய வகை வவ்வால்களும் கண்டறியப்பட்டுள்ளன. இவை தவிர கார்பென்டேரியா வளைகுடா கடலில் புதிய இன கடல் பாம்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ![]() ![]() |



