மதுரை: சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தொடர்பாக 28ம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறும் என்றும் அதன் பின்னர் பிரசாரம் தொடங்கும் என்றும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.திமுக முன்னாள் அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.தென்னரசுவின் 84வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார்.
பி்ன்னர் செய்தியாளர்களிடம் அழகிரி பேசுகையில்,
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஜவகர் சூர்யகுமார், வரும் 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார். மனுதாக்கல் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வேன்.
28ஆம் தேதி கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகிறார். அவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. தொடர்ந்து பிரச்சாரம் நடைபெறும்.
தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றார் அழகிரி.