அதிரை சேர்மன் ஓர் அலசல்!



அதிராம்பட்டினம் தக்வா பள்ளிக்கு சொந்தமான மார்க்கெட்டில்(பெரிய கடைத்தெரு) மீன் வியாபாரம் செய்துவருபவர்களுக்கும்  தக்வா பள்ளி நிர்வாகத்திற்கும் பெரியளவில் ஏற்பட்டுள்ள விரிசல்களின் காரணமாக நமதூர்சேர்மன் மார்கெட் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தக்வா நிர்வாகத்துடன் சேர்ந்து பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்ற நோக்கில் களம்இறங்கினார் இதன் விளைவு அவருக்கும் மீன்மார்க்கெட் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஆங்காகங்கே இப்பிரச்சனைகளோடு சேர்மன் அஸ்லம் அவர்களின் பெயர் பரவத்தொடங்கியது.
 அதிராம்பட்டினத்தில் பேரூராட்சி பணிகளை சேர்மன் அஸ்லம் அவர்கள் சரிவர செய்துவரவில்லை என்ற கருத்து நமதூர்வாசிகளிடம் பரவியிருக்கின்றன. சில பேர் வெளிப்படையாகவே சொல்லியிருக்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே பரவலாய் பல  வார்த்தைகளை மக்கள் கோர்த்துபேசி வருகிறார்கள் இதெல்லாம் உண்மையா? ஏன் இப்படி நடக்கிறது என்ற உண்மைச்சம்பவத்தை உள்ளபடி மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்ற நன்னோக்கில் அதிரை மக்கள் பலரிடமும் பேட்டிக்கண்டு கேள்விகளை தொகுத்து அதிரைச்சேர்மன் அஸ்லம் அவர்களை சந்தித்து தெளிவுபடுத்தவேண்டும் நோக்கில் உங்களுக்காக அதிரை பிளஸ்...

   அதிரைபிளஸ் நிருபரும் அதிரை சேர்மன் அஸ்லம் அவர்களுக்குமிடையில் நடைபெற்ற பேட்டியின் சிறிய தொகுப்பு :
நிருபர் : தற்பொழுது உங்கள் பெயர் மார்க்கெட் பிரச்சனையில் விருவிருப்பாக பேசப்படுகிறது.உங்களுக்கும் மார்க்கெட்டிற்கும் என்ன பிரச்சனை?
சேர்மன் :எனக்கும் மார்க்கெட்டிற்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. மார்க்கெட்டில் கடைக்கட்டுவதற்காக அந்த இடத்தை பார்ப்பதற்காக என்னை தக்வா பள்ளி நிர்வாகம் அழைத்து சென்றார்கள். நான் அந்த இடத்தை பார்ப்பதற்காக சென்றபோது என்னை அதனை பார்க்கவிடாமல் தகாத வார்த்தைகளால் என்னை திட்டினார்கள்.
நிருபர் : இந்த பிரச்சனையை நீங்கள் தலைமை ஏற்று  தீர்வுகாணலாமே?
சேர்மன் : இந்த பிரச்சனை அனைத்து முஹல்லா நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மக்கள் நிச்சயம் இந்த பிரச்சனைகள் பற்றி தெளிவாக அறிந்திருப்பார்கள். மேலும் அதிராம்பட்டின பேரூராட்சி நிர்வாகம் சரிவர தெருக்களில் குப்பை கூளங்களை சுத்தப்படுத்துவதில்லை என்ற பிரச்சனை சம்மந்தமாக கேள்வி கேட்கப்பட்டது.
நிருபர் : ஒருசில இடங்களில் நீங்கள் குப்பைகளை அகற்றக்கூடாது என்று கூறியிருக்கிறீர்கள் ஏன்?
சேர்மன் : குப்பைகளை சரிவர குப்பைத்தொட்டிலில் கொட்டாமல் வெளியிலேயே போட்டுவிடுவதால் காற்றில் ஆங்காங்கே பரவுகிறது இதனால் நோய்கள் பல பரவுகிறது. குப்பைத்தொட்டிகள் ஆங்காங்கே வைத்தும் குப்பைகள் வெளியே கொட்டாமல் இருப்பதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
நிருபர் : ஏரிப்புறக்கரைக்குட்பட்ட பகுதிகளை அதாவது சாணாவயல், சவுக்குகொல்லை பகுதிகளை அதிராம்பட்டினத்தோடு இணைக்கப்பபோவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா?
சேர்மன் : இதுவரை இதுபோன்ற தீர்மானம் எதுவும் கொண்டுவரவில்லை. இனிமேல் சேர்க்கவும் முடியாது. சேர்த்தால் இந்த ஊர் நகராடசியாக மாறலாம். அதற்குரிய எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை
சுத்தமிருந்தால் சுகமாய் வாழலாம். சுத்தத்தை பற்றி அதிரை பிளஸில் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்துக்கொண்டேயிருங்கள் மக்களின் சேவைகளை அறிந்து அதிரை பேரூராட்சி நிச்சயம் நன்மைகள் பயக்கும் என்ற உறுதியான நம்பிக்கையை நீங்கள் தெளிவுபடுத்துங்கள் என்று கூறினார்.





thanks to adiraiplus.com
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: