சிரியாவில் மக்கள் மீது ஜனாதிபதி அசாத்தின் இராணுவம் நடத்தி வரும் வன்முறை அராஜகங்களுக்கு ஐ.நா பொதுச் சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிரியா நிலவரத்தை நேரில் அறிவதற்காக சீன வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் ஜாய் ஜுன் தலைநகர் டமாஸ்கஸ் சென்றார். அங்கு சிரியா வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் பைசல் மெக்தத்தை சந்தித்து பேசிய பின் ஜனாதிபதி அசாத்தையும் சந்தித்துப் பேசினார். இதையடுத்து ஜுன் அளித்த பேட்டியில், சிரியாவில் அனைத்துத் தரப்பினரும் தங்கள் வன்முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேநேரம் ஜனாதிபதி அறிவித்துள்ள புதிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கான பொது வாக்கெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்த நாடாளுமன்ற தேர்தல்கள் நாட்டில் அமைதியைக் கொண்டு வரும் என நம்புகிறோம் என்றார். ![]() ![]() ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் சிரியாவுக்கு எதிரான தீர்மானத்தை தடையாணை(வீட்டோ) மூலம் முறியடித்த சீனா தற்போது சிரியாவின் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கான பொது வாக்கெடுப்பை ஆதரித்துள்ளது. ஆனால் இந்த வாக்கெடுப்பை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன. தேர்தல் நடக்கும் 26ம் திகதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கிடையில் சிரியாவில் அசாத் இராணுவம் எத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுகிறது என்பதற்கான உறுதியான ஆதாரங்களை திரட்டும் வகையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் சிரிய வான்வெளியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த கண்காணிப்பு எதிர்காலத்தில் சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான அறிகுறி அல்ல எனவும், இராணுவம் மற்றும் அசாத் நிர்வாகம் இடையே நடக்கும் தகவல் தொடர்பை இடைமறித்து கேட்பதன் மூலம் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறார் எனவும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ![]() ![]() |
சிரியா- சீனா திடீர் சந்திப்பு: சிரியாவை நோட்டமிடும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail



