சென்னையில் கல்லூரி மாணவி கொலை!! ஒருதலைக்காதல் விபரீதம்!


சென்னையில் ஒருதலைக்காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனாம்பேட்டை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வசித்து வந்தவர் சங்கீதா (19). இவர் காயிதே மில்லத் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வந்த மணிகண்டன் என்பவர் சங்கீதாவை ஒருதலையாக காதலித்து வந்தார்.

ஆனால் மணிகண்டனின் காதலை சங்கீதா ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டு அருகே சங்கீதா சென்று கொண்டிருந்த போது மணிகண்டன் அவரை வழிமறித்து பேசினார். என்னை தவிர வேறு யாரும் உன்னை திருமணம் செய்தால் நான் சும்மாவிட மாட்டேன் என மிரட்டினார். ஆனால் சங்கீதா இதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் நடந்து சென்று கொண்டே இருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தினார். இதில் உடலின் பல்வேறு இடங்களில் கத்திக் குத்து விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் சங்கீதாவின் உயிர் பிரிந்தது.

கூட்டத்தை பார்த்ததும் மணிகண்டன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அங்கிருந்தவர்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் தேனாம்பேட்டை போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீசாரிடம் மணி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
சங்கீதாவை பார்த்ததுமே எனக்கு பிடித்துவிட்டது. அவரது முதல் பார்வையிலேயே காதல் வயப்பட்டேன். சங்கீதா எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவார். அவரது இந்த சுபாவம், அவர் மீதான காதலை மேலும் அதிகரித்தது.
2 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் காதலை வெளிப்படுத்தினேன். முதலில் தயங்கிய சங்கீதா, பின்னர் காதலை ஏற்றுக் கொண்டார். நேரிலும் போனிலும் அடிக்கடி பேசுவோம்.
கல்லூரியில் சேர்ந்த பிறகு என்னுடன் பேசுவதை படிப்படியாக குறைத்துவிட்டார். கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தன்று அவருடன் பேச முயன்றும் முடியவில்லை.
பள்ளி மாணவியாக இருந்தபோது காதலித்தவள், கல்லூரிக்கு சென்றதும் காதலிக்க மறுக்கிறாளே என்று ஆத்திரம் வந்தது. என்னை காதலிக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைத்தேன்.
அதனால் கத்தியுடன் அவரது வீட்டுக்கு சென்றேன். காதலை ஏற்றுக் கொண்டால் விட்டு விடுவது, மறுத்தால் கொன்று விடுவது என்ற முடிவுடன் காத்திருந்தேன். வேலையில் இருந்து வந்த சங்கீதாவிடம் பேச முயன்றேன். என்னை மறந்துவிடு என அவர் கூறியதால் கத்தியால் குத்திக் கொலை செய்தேன். இவ்வாறு மணி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: