ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஆலிவர் ஸ்டோனின் மகன் இஸ்லாத்தை தழுவினார் !


Stone, son of Oscar-winning director Oliver Stoneடெஹ்ரான்:பிரபல இயக்குநரும், உலகப்புகழ் பெற்ற ஆஸ்கர் விருதை பெற்றவருமான ஆலிவர் ஸ்டோனின் மகன் ஸீன் ஸ்டோன் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார் ஈரானின் நகரமான இஸ்பஹானில் வைத்து ஸீன் இஸ்லாத்தில் நுழைவதற்கான வார்த்தைகளை(ஷஹாதா கலிமா) கூறி தன்னை முஸ்லிமாக மாற்றிக்கொண்டார். ஈரானின்
ஃபார்ஸ் செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
ஸீன் தனது பெயரின் துவக்கத்தில் ‘அலி’ என்ற வார்த்தையை(இஸ்லாத்தின் நான்காவது கலீஃபாவின் பெயர்) இணைத்துக் கொண்டார்.
ஸீன் தனது தந்தை ஆலிவர் ஸ்டோன் இயக்கிய திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார். ஸீனின் தந்தையான ஆலிவர் ஸ்டோன் ஒரு யூதர் ஆவார். அவரது தாயார் கிறிஸ்தவர். ஸீன் தான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டதற்கான காரணத்தை கூறவில்லை.
ஸீன் தந்தை ஆலிவர் ஸ்டோன் 1980 களிலும், 1990 துவக்கத்திலும் தொடர்ந்து வியட்நாம் போர் தொடர்பான திரைப்படங்களை இயக்கியுள்ளார். 3 அகாடமி விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஸீன் ஈரானுக்கு உறுதியான ஆதரவாளர். டொராண்டோ ஃபிலிம் பெஸ்டிவலில் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கான உரிமையை ஆதரித்து பேசினார். இஸ்ரேலின் அச்சுறுத்தலை முறியடிக்க அணுசக்தி தேவை என ஸீன் குறிப்பிட்டார்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: