உயரமான பெண்ணா? கருப்பை புற்றுநோய் ரிஸ்க் அதிகம்! : ஆய்வில் தகவல்

பெண்களின் உயிரைக்குடிக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கருப்பை வாய் புற்றுநோய். இந்த புற்றுநோய்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் உயரம் அதிகம் உள்ள பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த பெண்கள் ஹார்மோன் மாற்று சிகிச்சை பெற்றார்களா என்பதைப் பொறுத்து முடிவுகள் அமையும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உலகம் முழுதும் பெண்களுக்கு கருப்பையில் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இந்த ஆய்விற்கு கருப்பை புற்று நோய் உள்ள 25,000 பெண்களும், புற்று நோய் இல்லாத 48,000 பெண்களும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆய்வின்போது ஒவ்வொரு 5 செமீ உயர வளர்ச்சியிலும் 7% இவர்களுக்கு கருப்பை புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. உதாரணமாக 165 செமீ உயரம் இருப்பவர்களுக்கு கருவக புற்று நோய் ஏற்பட 14% அதிக வாய்ப்பிருந்தால், 155 செமீ உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருப்பை புற்று நோய் வளர்ச்சியில் பெண்களின் உயரம் என்பதை நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள இந்த ஆய்வு முடிவுகள் உதவி புரிவதாக ஆக்ஸ்பர்ட் பல்கலைகழக புற்று நோய் ஆய்வாளர் டாக்டர் கில்லியன் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார். ஆனாலும் உயரம் ஏன் கருப்பை புற்று நோய் ரிஸ்கை அதிகப்படுத்துகிறது என்பதற்கான உண்மையான காரணங்கள் தெரியாவிட்டாலும் சில விளக்கங்கள் கொடுக்க முடியும் என்கிறார் ரீவ்ஸ்.

உயரம் அதிகமுள்ள பெண்களுக்கு 'இன்சுலின்' மட்டம் அதிகமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்த இன்சுலின் அளவுதான் மற்ற புற்று நோய்களைத் தீர்மானிக்கிறது. மார்பகப் புற்றுநோய்க்கும் இதுவே காரணமாக அமைகிறது. உயரம் அதிகம் இருப்பதால் செல்களின் எண்ணிக்கை அதிகமாகும் நடைமுறையில் புற்று நோய் செல் உற்பத்தியாகும் வாய்ப்பு அதிகமுள்ளது, ஆனாலும் எதிர்கால ஆய்வுகள்தான் இதனை உறுதி செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள். ப்ளாஸ் மெடிசின் என்ற மருத்து இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: