டெல்லி: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் புதிதாக 10 எக்ஸ்பிரஸ் ரயில்களும், 4 பாஸஞ்சர் ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி இன்று நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே பட்ஜெட்டைத் தாக்க்ல செய்தார். அதில் மொத்தம் 75 எக்ஸ்பிரஸ் ரயில்களும், 21 பாஸஞ்சர் ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு 10 எக்ஸ்பிரஸ் ரயில்களும், 4 பாஸஞ்சர் ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
எக்ஸ்பிரஸ் ரயில்கள் விவரம்:
1. பாலக்காடு- ஈரோடு
2. மதுரை- கச்சிகுடா (ஹைதராபாத்) வாராந்திர எக்ஸ்பிரஸ்
3. சென்னை- ஷாலிமார் (கொல்கத்தா) வாரந்திர ரயில்
4. மன்னார்குடி- திருப்பதி (வாரம் 3 முறை- திருவாரூர், விழுப்புரம், காட்பாடி வழியாக)
5. கோவை- பிகானீர் (ராஜஸ்தான்) ஏசி எக்ஸ்பிரஸ் வாரந்திர ரயில்
6. சென்னை- பெங்களூர் ஏசி டபுள் டெக்கர் தினசரி
7. திருச்சி- திருநெல்வேலி தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (மதுரை, விருதுநகர் வழியாக)
8. விசாகபட்டினம்- சென்னை வாரந்திர ரயில்
9. சென்னை- பூரி (ஒரிஸ்ஸா) வாரந்திர ரயில்
10. சென்னை- அசன்சோல் (மேற்கு வங்கம்) வாரந்திர ரயில்
பாஸஞ்சர் ரயில்கள்:
1. விழுப்புரம்- காட்பாடி தினசரி
2. விழுப்புரம்-மயிலாடுதுறை தினசரி
3. பாலக்காடு- கோவை- ஈரோடு
4. மன்னார்குடி- திருச்சி- மானாமதுரை தினசரி
புதிய ரயில் பாதைகள்:
இந்த ஆண்டில் 41 புதிய ரயில் பாதைகளை அமைக்கும் பணி முடிக்கப்படும். அதில் நீடாமங்கலம்-மன்னார்குடி, மோகனூர்-கரூர் ஆகிய தமிழக திட்டங்களும் அடக்கம். இதில் பெரிய அளவிலான எந்த தமிழக திட்டமும் இடம் பெறவில்லை.
ஜோலார்பேட்டை-கிருஷ்ணகிரி திட்டம்:
நாடு முழுவதும் 81 புதிய ரயில் பாதைகள் அமைக்க அனுமதி கோரி திட்டக் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் திரிவேதி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
அதில், தமிழக திட்டங்களான ஜோலார்பேட்டை-ஒசூர் (வழி-கிருஷ்ணகிரி), காரைக்கால்-பேராளம், ஆவடி-கூடுவாஞ்சேரி (வழி-ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம்) ஆகியவையும் அடங்கும். இதிலும் பெரிய அளவிலான எந்தத் திட்டமும் இல்லை.