பெங்களூர்: கோவாவைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் பெட்ரோல் விலை குறைக்கப்படுகிறது. இந்த 2 மாநிலங்களிலுமே பாஜக ஆட்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.கோவாவில் புதிதாக பதவியேற்றிருக்கும் பாஜக அரசு கடந்த திங்கட்கிழமை மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அப்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.11 குறைப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து அங்கு 65 ரூபாய்க்கு விற்கும் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.54 ஆக குறைக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்திலும் பெட்ரோ்ல் விலை லிட்டருக்கு ரூ.15.5 குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. பெட்ரோல் மீதான வாட் வரியை திரும்பப் பெற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து தற்போது ரூ.73.51க்கு விற்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 58 ஆக குறையும்.
கோவா அரசை பின்பற்றினால் பெரும் நகரங்களில் பெட்ரோல் விலையை ரூ. 15 வரை குறைக்கலாம் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.