சென்னையில் பிடிபட்ட ரூ.7 கோடி பணம்! யார் யாருக்கு தொடர்பு?

 சென்னை புறநகர்ப்பகுதியான ஆதம்பாக்கத்தில் ரூபாய் 7 கோடி பணம் சிக்கியிருக்கிறது. 

இதுகுறித்து நமது விசாரணையில் கிடைத்த கூடுதல் தகவல்கள்:

ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் வசிப்பவர் நாகராஜன், இவரது வீட்டில் திடீரென 12.03.2012 அதிகாலை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 7 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் சிக்கியிருக்கிறது. இந்த பணம் வந்த வழிப்பற்றி போலீசார் விளக்கம் கேட்டபோது, 1981 முதல் லாட்டரி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததால், கிடைத்த பணம் இது என்ற அவர், லாட்டரி சீட்டுகளை சென்னையில் இருந்து ஹைத்ராபாத், டெல்லியிலிருந்து சிக்கிம், மேற்கு வங்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைப்பேன்.

அப்படி அனுப்பும்போது அதில் இருந்து சில பண்டில் லோடுகளை இங்கு கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் ஏஜெண்டுகள் மூலம் விற்று வந்தேன். என்னுடன் 1984ல் இருந்து கும்பகோணம் மூர்த்தி என்பரும் வேலை பார்த்து வந்தார். அவருடைய வருமானமும் ரூபாய் 2 கோடி இதில்தான் உள்ளது. 

லாட்டரி தொழிலில் மூர்த்திக்கு பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் உள்பட பலருக்கு தொடர்பு உள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீசார், சென்னை அண்ணாநகரில் வசிக்கும் கும்பகோணம் மூர்த்தி வீட்டில் சோதனை நடத்தியபோது, அந்த வீட்டில் ரூபாய் 50 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூர்த்தி தலைமறைவாகிவிட்டார். 

மடிப்பாக்கம் உதவி கமிஷனர் தலைமையில் விசாரணை நடப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரியவந்துள்ளது கூடுதல் எஸ்பி ஜெயக்குமா தலைமையில் நடந்த இந்த வேட்டையில் இவ்வளவு பெரிய தொகை சென்னையில் நீண்ட இடைவெளிக்குப்பின் இப்போதுதான் சிக்கியுள்ளது. பல்வேறு வழக்ககள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மார்ட்டின் மீது, நாகராஜன் மற்றும் கும்பகோணம் மூர்த்தியும் சொல்லியுள்ள ஆதாரபூர்மான தகவல்கள் மார்டினுக்கு மேலும் தலைவலியை கொடுக்கும் என்பதோடு, இதில் மிகப்பெரிய அரசியல் சதி இருப்பதாகவும் பேசப்படுகிறது. 

பறிமுதல செய்யப்பட்ட பணத்தை போலீசார் செய்தியாளர்கள் முன் காட்டி விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: