திருச்சி: துறையூரில் இன்று காலையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் குறித்த விபரம் தெரியவில்லை.திருச்சி மாவட்டம், துறையில் இன்று காலையில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமார் 3 நிமிடங்கள் நீடித்த நில அதிர்வு துறையூரை அடுத்த சித்திரைபேட்டை, செங்காட்டுபட்டு, முருங்கூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களால் உணரப்பட்டது. நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் குறித்து தெரியவில்லை. சேதம் குறித்த விபரங்களை அரசு அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர், வி.துறையூர் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. அதில் 20 வீடுகளில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.