
லக்னோ, மார்ச். 9 -
உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி தனிப்பெரும்பான்யாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து யாரை முதல்வராக்குவது என்பது பெரும் குழப்பமாகவே இருந்து வருகிறது. சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் முதல்வர் ஆக வேண்டும் என ஒரு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். வேறு சிலர் முலாயம்சிங் யாதவின் மகனும் முன்னாள் துணை முதல்வருமான அகிலேஷ் யாதவ் முதல்வராக பதவியேற்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் முலாயம்சிங் யாதவ் கூறியதாவது:-
கட்சி தரப்பில் இன்று வெளியிட செய்திகள் ஏதும் இல்லை. வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் உ.பி.யின் முதல்வர் தேர்வு செய்யப்படுவார். முதல்வர் தேர்வு செய்யப்பட்டவுடன் பதவியேற்பு தேதி வெளியிடப்படும் என்று கூறினார்.