திண்டுக்கல் பேருந்து நிலைய பகுதியில் உள்ள ஒரு விடுதியில் திங்கட்கிழமை ஒரு பயங்கரவாத கும்பல் துப்பாக்கிகளுடன் பதுங்கி இருப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிஸ் படை யினர் 25க்கும் மேற்பட்டோர் அங்கு துப்பாக்கிகளுடன் குவிந்தனர்.
அவர்கள் முதலில் பயங்கரவாத கும்பல் விடுதியின் எந்த அறைகளில் தங்கியிருக்கிறார்கள் என்பதை விசாரித்தனர். அப்போது அந்த கும்பல் 2 அறைகளில் தங்கியிருப்பது தெரியவந்தது.
அப்போது கதவைத் திறந்த பயங்கரவாதக் கும்பல் வாசலில் போலிசார் நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போய் கதவை அடைக்க முயற்சித்தது. அச்சமயம் ஜெயச்சந்திரன் கதவைத் திறந்து சென்று அறையில் இருந்த 3 பேரை பிடிக்க முயன்றார். அந்த 3 பேரும் திடீரென அவரைப் பாய்ந்து பிடித்து அவரது கழுத்தை நெரிக்க முயற்சித்தனர்.
இதைப் பார்த்ததும் அறையின் வெளியே துப்பாக்கிகளுடன் நின்றிருந்த இதர போலிசார் பயங்கர வாதக் கும்பலை நோக்கி சுட்டனர். இதில் பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்த ஒருவனின் இடது பகுதியில் குண்டு பாய்ந்தது. ரத்தம் சொட்ட சொட்ட சுருண்டு விழுந்த அவன் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது மாண்டான்.