ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவுக் காலம் 90 நாட்களில் 120 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.மார்ச் 10ம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு 90 நாட்களில் இருந்து 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜூன் 8ம் தேதிக்கு புறப்படும் ரயிலுக்கு மார்ச் 10 ம் தேதியன்றே முன் பதிவு செய்ய முடியும். மார்ச் 10 ம் தேதி முன்பதிவு தொடங்குவதால் மொத்தமாக டிக்கெட்களை முன்பதிவு செய்பவர்கள் மார்ச் 11ம் தேதி முதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இவ்வாறு தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.