இங்குள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகள் கல்வி பயில்கின்றனர். பள்ளி முடியும் நேரத்தில் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர்களுடன் தெருவோர வியாபாரிகளும் காத்திருக்கின்றனர். இவர்கள் பள்ளி கழிப்பறையில் தாங்கள் வைத்துள்ள போத்தல்களை எடுத்துச்சென்று அதில் நிரம்பியுள்ள சிறுநீரை வைத்து முட்டையை அவித்து விற்பனை செய்கின்றனர். அதுவும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சிறுநீர் மட்டுமே சேகரிக்கின்றனர். நூறாண்டு பாராம்பரிய உணவு: இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது, டாங்யாங் நகரில் பல 100 ஆண்டுகளாக இந்த உணவு வழக்கத்தில் உள்ளது. நுகர்வோர்கள் இதை விரும்பி உண்கின்றனர். தெருவோரத்தில் நடந்து போகும் போது இந்த முட்டையின் வாசனை நுகர்வோரை கவர்ந்திழுக்கிறது. மேலும் மூட்டுவலி, சன்ஸ்ரோக், இரத்தம் சீராகுதல், உடல் வலி போன்ற நோய்களை இந்த உணவு நீக்கவல்லது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
சீனாவில் அமோக விற்பனையாகும் சிறுநீரில் வேக வைத்த முட்டை
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail





