தமிழ்நாட்டில் நபர் ஒருவரின் வயிற்றில் 4294 கற்கள் அகற்றம்



 தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தை அடுத்துள்ள ஆர்.என்.புதூரை சேர்ந்தவர் துரைசாமி(62). இவர் விஏஓவாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார், வாயு தொல்லையும் இருந்து வந்தது.
இதற்காக ஈரோடு வள்ளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஸ்கேன் செய்து பார்த்த போது அவரது பித்த பையில் கற்கள் அடைத்திருப்பது தெரியவந்தது.
டாக்டர் டி.கே.சாமி தலைமையிலான மருத்துவர்கள் குழு லேப்ராஸ்கோபி முறையில் அறுவை சிகிச்சை செய்து பித்த பையில் இருந்து 4294 கற்களையும், கடைசியாக பித்தபையையும் அகற்றினர்.
இதுகுறித்து டாக்டர் டி.கே.சாமி கூறுகையில், எங்கள் மருத்துவமனையில் அதிகபட்சமாக 80 கற்கள் வரை மட்டுமே அகற்றி உள்ளோம். தற்போது 4294 கற்கள் அகற்றப்பட்டு நோயாளி நலமுடன் உள்ளார்.
உலக அளவில் ஜேர்மனியை சேர்ந்த ஒரு மூதாட்டிக்கு 3110 கற்கள் அகற்றப்பட்டதே சாதனையாக இருந்து வந்தது. பித்த பையில் ஆயிரக்கணக்கில் கற்கள் இருந்து எந்த உபாதையும் ஏற்படாவிட்டால் அகற்ற வேண்டியதில்லை. ஒரு கல் இருந்து உபாதை ஏற்படுத்தினால் அகற்றுவது தான் சிறந்தது என்றார்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: