திறந்தமேனி வடிவமைப்புடன் 200சிசி எஞ்சினுடன் புதிய பல்சர் வருவதையொட்டி 220 சிசி பல்சர் விற்பனையை சத்தமில்லாமல் பஜாஜ் ஆட்டோ நிறுத்தியுள்ளது.ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் பல்சர் வரிசை பைக்குகளின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. குறிப்பாக, பல்சர் 220க்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது.
இந்த நிலையில், விரைவில் புதிய 200சிசி பல்சர் வருவதையொட்டி, 220 சிசி திறன் கொண்ட பல்சரின் விற்பனையை பஜாஜ் ஆட்டோ நிறுத்தியுள்ளது.
ஏற்கனவே 180சிசி பல்சர் விற்பனையை பஜாஜ் நிறுத்தி இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். ஆனால், தற்போது 220 சிசி பல்சர் விற்பனையை பஜாஜ் ஆட்டோ முற்றிலும் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
220சிசி பல்சர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து, விரைவில் புதிய பல்சர் 200 சிசி மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.