புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு 6 உறுப்புகள் மாற்றம்


அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தை சேர்ந்த சிறுமி அலனா ஷெவனெல்(9) புற்றுநோயால் பாதிக்கப்பட்டாள். இதனால் அவளது பல உறுப்புகளில் புற்றுநோய் பரவி வந்தது.
குடல், கல்லீரல், கணையம், உணவுக் குழாய் உள்பட 6 உறுப்புகளில் புற்றுநோய் பரவியதை, மசாசூசட்ஸ் மாகாணத்தின் பாஸ்டன் நகர குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
சிறுமியை காப்பாற்ற மருத்துவக்குழு தீவிர ஆலோசனை நடத்தியது. பின்னர் 6 உறுப்புகளை மாற்றி அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, சிறுமியுடன் அவளது பாட்டி மருத்துவமனையில் தங்கியிருந்தார். மூன்று மாதங்களுக்கு மேல் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த சிறுமி அலனாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை 6 உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இப்போது சிறுமி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இது மருத்துவ உலகில் ஒரு அதிசயம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குழந்தைகள் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஹியூங் பே கிம் கூறுகையில், சிறுமிக்கு அளித்த எல்லா வித சிகிச்சைகளும் தோல்வி அடைந்த நிலையில், 6 உறுப்புகளை மாற்றுவது என்ற முடிவுக்கு வந்தோம்.
அதிர்ஷ்டவசமாக சிறுமிக்கு தேவைப்பட்ட 6 உறுப்புகளும் தானமாக கிடைத்தது. அதனால் உடனடியாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து முடித்தோம். அவள் வழக்கம் போல் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.



Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: