ஜோத்பூர், ஜன.2 - ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நர்ஸ் பன்வாரி தேவி மாயமான வழக்கு தொடர்பாக சிபிஐ ஜலோட கிராமத்தில் பன்வாரி தேவியின் உடல் புதைக்கப்பட்டதாக வந்த தகவலின் அடிபடையில் கிராமத்தின் பல்வேறு இடங்களில் நவீன சாதனங்களை பயன்படுத்தி சோதனை மேற்கொண்டனர் ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.
முன்னதாக, நர்ஸ் பன்வாரி தேவி கடந்த செப்டம்பர் மாதம் 1 ம் தேதி முதல் காணாமல் போனார். நர்ஸ் காணாமல் போவதற்கு அமைச்சர் மிகபால் மதர்னா மற்றும் அவரது கூட்டாளிகள்தான் காரணம் என பன்வாரியின் கணவர் போலீசில் புகார் செய்தார்.
இவ்வழக்கு விசாரணையில் மாநில போலீஸார் மெத்தன போக்கை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டி வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது மாநில ஐகோர்ட்.
இதனையடுத்து மாநில முதல்வர் அசோக் கெலாட் அமைச்சரை மதர்னாவை பதவியிலிருந்து நீ்க்கும்படி மாநில கவர்னருக்கு பரிந்துரைத்தார். முதல்வரின் பரிந்துரையின் பேரில் கவர்னர் சிவராஜ்பாட்டீல் மதர்னாவை பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கில் அமைச்சர் மிகபால் மதர்னா மற்றும் அவரது மனைவி உட்பட அவர்களுக்கு உடந்தையாக இருந்த 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
maalaimalar.com