இங்கிலாந்தில், புனேவைச் சேர்ந்த அனுஜ் பித்வே என்ற மாணவர் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 17 வயது இளைஞர் ஒருவரை லண்டன் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.அவரது பெயரைத் தெரிவிக்க மறுத்த போலீஸார், கொலைக்கான நோக்கம் குறித்து புலன்விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையும் எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவம் நடைபெற்றபோது அங்கிருந்த 8 சக மாணவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் அனுஜின் தந்தை சுபாஷ் பித்வே, தனது மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய அரசுக்கும், அனுஜின் நண்பர்களுக்கும், ஃபேஸ்புக் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் துறையில் முதுநிலைப் படிப்பில் சேர்ந்து படித்து வந்தவர் அனுஜ் பித்வே. கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக மான்செஸ்டரிலுள்ள நண்பர்களைப் பார்க்கச் சென்றபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
thedipaar.com