நாகர்கோவில்: நாகர்கோவில் ராமசாமி அய்யர் நினைவு பூங்காவில் ராணுவத்தின் "மிக் 21' போர் விமானம் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. கல்கத்தாவில் இருந்து இரண்டு லாரிகளில் இந்த விமானம் கொண்டுவரப்பட்டது. இந்த விமானம் போரின் போதும், போர் பயிற்சிக்காவும் பயன்படுத்தக்கூடியது. 1965-ல் பாகிஸ்தான் போரிலும், 1971-ல் வங்க தேசத்துடனான போரிலும் பயன்படுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 2175 கி.மீ., தூரம் கடக்கும் திறன் கொண்டது. 43 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க கூடியது. விமானத்தை பார்க்கும் இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் இதுபோன்ற விமானங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
தினமலர்
தினமலர்