திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்துள்ள மேலகரத்தில் பிரபல கோழி மொத்த வியாபார நிறுவனம் உள்ளது. இதில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த முருகன் 30, மானேஜராக உள்ளார். நேற்றுமுன்தினம் கோழி விற்ற மொத்த பணம் 6 லட்சத்து 68 ஆயிரத்தை கடையில் வைத்திருந்தார். அவர் வெளியே சென்றிருந்த நேரத்தை "கவனித்த' மர்ம நபர் அதனை திருடிக்கொண்டார். பணம் காணாமல் போனது குறித்து முருகன் குற்றாலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கோழிக்கடை ஊழியர்களிடம் முதலில் விசாரித்தனர்.விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அவசர வேலையாக ஊருக்கு கிளம்பிய திண்டுக்கல், மரியநாதபுரத்தை சேர்ந்த புரு÷ஷாத்தமன் 23, என்பவரை விசாரித்தனர். அவர்தான் பணத்தை எடுத்ததும் தெரியவந்தது. அவர் செலவு போக மீதம் வைத்திருந்த 6 லட்சத்து 53 ஆயிரத்தை மீட்டனர்.
தினமலர்
தினமலர்