எகிப்து: பெண் கைதிகளின் கன்னித்தன்மையை பரிசோதிக்க கோர்ட் தடை.

வழக்கு விசாரணைக்காக கைது ‌செய்யப்படும் பெண்களுக்கு கன்னித்தன்மையை பரிசோதனை செய்யக்‌கூடாது என எ‌கிப்து கோர்ட் ராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளது.
எ‌கிப்து நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில் அதிபர் ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்‌கள் ஏராளமானோர் பங்கேற்றனர். எகிப்து நாட்டில் ராணுவ விசாரணைக்காக கைது ‌செய்யப்படும் பெண்களுக்கு ராணுவத்தினர் கன்னித்தன்மையை பரிசோதிப்பது வழக்கமாக இருந்து வந்தது.
அதன்படி மேற்கண்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பெண்களுக்கு வழக்கமான சோதனை மேற்கொள்ள முயன்றனர். இந்நிலையில் சமீரா இப்ராஹிம் என்ற பெண்மணி இச்சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள் பெண்களின் கன்னித்தன்மை குறித்து பரிசோதனை செய்வதற்கு ராணுவத்தினருக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
.thedipaar.com
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: