சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் வழக்கு.

 சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தால்  நிலத்தடி நீர் மாசடைவதுடன் ஐயாயிரம் வீடுகளும் பாதிக்கப்படும்’ என இந்தத் திட்டத்திற்கு தடை செய்யக் கோரி உயர் நீதிமன் றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனால், மெட்ரோ ரயிலுக்கு ரெட் சிக்னல் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது! 

சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பதற்காக  மெட்ரோ ரயில் திட்டம் 2007-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய்  செலவிலான இந்தத் திட்டப் பணிகள்  மத்திய - மாநில அரசுகள் மற்றும் ஜப்பான் நிறுவனத்தின் உதவியால் நடைபெற்று வருகின்றன. இதன்படி வண்ணாரப்பேட்டையில்  இருந்து விமான நிலையம் வரை ஒரு தடமும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை மற்றொரு தடமுமாக மொத்தம் 45 கி.மீ. தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

இரண்டு தடங்களிலும் கிட்டத்தட்ட பாதித் தொலைவுக்கு சுரங்கப் பாதை வழியாக ரயில் செல்லும் வகையில் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. இந்த சுரங்கப் பாதைகளை  அமைப்பதற்காக சீனாவில் இருந்து ராட்சத துளையிடும் இயந்திரங்கள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பணிகளை மு டுக்கிவிடும் வேளையில்தான்  சென்னை ஜார்ஜ் டவுன் கட்டட உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர்  இதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

ஜார்ஜ் டவுன் கட்டட உரிமையாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் நரேஷ்குமார் நம்மிடம், “சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்தத் திட்டம் தேவை  என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. அதேசமயம் இந்தத் திட்டத்தால் குடியிருப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதே எங்கள் வேண்டுகோள். வ ண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை அமையவுள்ள முதல் தடத்தின் சுரங்கப் பாதை  பழைய சிறை ரோடு, பிரகாசம் ரோடு வழியாகவே மண்ணடிப் பகு தியைக் கடந்து செல்வதாக முதலில் கூறப்பட்டது. 2008-ம் ஆண்டு இது சம்பந்தமாக அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களும் நடத்தப்பட்டன. பின்னர் எ ன்ன நடந்ததோ, திடீரென ஏழுகிணறு, ஜார்ஜ் டவுன் வழியாக சுரங்கப் பாதை மண்ணடியைக் கடந்து செல்வதாக திட்டத்தை மாற்றிவிட்டனர். சில மாதங்களுக்கு முன் புதான் இதுபற்றி எங்களுக்குத் தெரிந்தது.  அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அதெல்லாம் தொழில்நுட்ப விஷயம்’ என்று காரணம் சொன்னார்கள்.

முதலில் திட்டமிட்டிருந்த தடம் பெரும்பாலும் சாலைகளின் அடியில் இருந்ததால், குடியிருப்புகளுக்கு பாதிப்பில்லாமல் இருந்தது.  தற்போது திட்டமிட்டுள்ள தடம்   இப்பகுதியில் உள்ள சுமார் 5,000  வீடுகளுக்குக் கீழே செல்கிறது.  இந்த வீடுகளுக்கு அடியில் வெறும் 33 அடி ஆழத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்பட உள்ளது.   ராட்சத இயந்திரங்களைக்கொண்டு இந்த வீடுகளுக்கு அடியில் சுரங்கம் தோண்டும்போது அதிர்வுகள் ஏற்படும். இதனால் வீடுகள் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறோம்.

மேலும், ஏழுகிணறு பகுதி நீர்வளத்திற்குப் பெயர்பெற்ற இடம். இங்குள்ள ஏழு கிணறுகள்தான் ஒருகாலத்தில் ஒட்டுமொத்த சென்னையின் தாகத்தைத் தணித்தன. தற்போது  சுரங்கப் பாதையின் வடிவில் இந்த நீர்வளத்திற்கும் ஆபத்து நேர்ந்திருக்கிறது. அதாவது, சுரங்கப் பாதை பணியின்போது பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருள் மண்ணின்  நெகிழ்வுத் தன்மையை மாற்றி, பாறைபோல் ஆக்கிவிடுமாம். இதனால் நீரூற்றுகள் அழியக்கூடும். எனவே மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பில்லாமல் முதலில் திட்டமி ட்ட வழித்தடத்திலேயே சுரங்கப் பாதையை அமைக்கவேண்டும் எனக் கோரி வழக்குத் தொடுத்துள்ளோம். இதில் நல்ல முடிவு கிடைக்கும்’’ என்றார் நம்பிக்கையுடன். 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் விளக்கம் கேட்டோம். “ஏற்கெனவே டெல்லியில் இந்த திட்டத்தை  வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தின் ஆலோசனைகளின்படியே இங்கு பணிகள் நடைபெறுகின்றன.  லண்டனிலும், சீனாவி லும்கூட இதே தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே வீடுகளுக்குப் பாதிப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை.

அதேபோல முதலில் திட்டமிட்ட வழித்தடத்தை மாற்றிவிட்டோம் என்பதும் சரியல்ல. மொத்தம் ஏழு வழித்தடங்களை நாங்கள் ஆய்வு செய்து அனுப்பினோம். அதில்  தொழிநுட்ப விஷயங்களை ஆராய்ந்து இரண்டு வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டிருக்கின்றன. மெட்ரோ ரயில் திட்டத்தின் சிறப்பம்சமே, சுற்றுச்சூழலை இது பாதிக்காது  என்பதுதான். சிலர் சொல்வதுபோல் அபாயகரமான வேதிப்பொருள் எதுவும் சுரங்கப் பாதை பணியில் பயன்படுத்தப்படுவது இல்லை. பூமிக்கடியில் ரயில் நிலையங்கள்  அமையும் பகுதிகளில் மட்டும் மண் சரிவைத் தடுக்க, ‘பென்டோனைட்’ என்கிற பசை போன்ற பொருளைப் பயன்படுத்துவார்கள். அதையும் உடனே அப்புறப்படுத் திவிடலாம். எனவே நீராதாரம் பாதிக்கும் என்பது வெறும் கற்பனையே.
சுரங்கப் பாதை செல்லும் வழியில் உள்ள கிணறுகளையும், ஆழ்துளைக் கிணறுகளையும் மூடியாக  வேண்டும் என்பது மட்டும்தான் இத்திட்டத்தால் மக்களுக்கு ஏற்படவுள்ள ஒரே பிரச்னை. இதை சரிசெய்ய அவர்களுக்கு மாற்று ஆள்துளைக் கிணறு அல்லது ஒரு லட்ச  ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை  செய்த பிறகே கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்போம். தேவையற்ற பயங்களை உதறிவிட்டு சென் னையின் வளர்ச்சிக்குத் தேவையான இந்தத் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.’’ என்றார் அவர்.

எப்படியோ நீதிமன்றம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு க்ரீன் சிக்னல் போட்டால் சரிதான்!
thedipaar.com
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: