இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில் வழங்கப்படும் சிறந்த வீரர் விருதினை இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி பெற உள்ளார்.ஏ.ஐ.எப்.எப்., சார்பில் ஆண்டுதோறும், சிறந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு இவ்விருதினை சுனில் சேத்ரி பெறுகிறார். இவர் 17 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 13 கோல்கள் அடித்துள்ளார். தவிர, சிராக் யுனைடெட் கிளப் அணிக்கான ஐ லீக் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இது குறித்து சுனில் சேத்ரி கூறுகையில்,""இந்த ஆண்டு நல்ல விதமாக ஆரம்பானது. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் பெறும் ஒவ்வொரு விருதும், இன்னும் என்னை மேம்படுத்தி கொள்ள உதவும்,'' என்றார்.
இதற்கிடையே டில்லியில் வரும் ஜன., 10ல் நடக்க உள்ள இந்தியா, பைரன் முனிச் அணிகளுக்கு இடையிலான கண்காட்சி போட்டியில் இருந்து சுனில் சேத்ரி விலகினார். கணுக்கால் காயம் முழுமையாக குணமடையாததால் இப்போட்டியில் இவரால் பங்கேற்க இயலவில்லை.
thedipaar.com