அமெரிக்கா: கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்து 6 பேரைச் சுட்டுக் கொன்ற மர்ம நபர் தற்கொலை.

அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்களில் டெக்ஸாஸ் மாநிலமும் ஒன்று. இதன் தலைநகர் கிராப்வைன். இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு கிறிஸ்துமசை கொண்டாடினர்.
 
அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் ஒருவன் அங்கு வந்தான். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்தவர்கள் அவனை அன்புடன் வரவேற்றனர். அவர்களுக்கு பரிசுப்பொருள் கொண்டு வந்திருப்பதாக கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் இருந்தவன் தெரிவித்தான். ஒரு பார்சலை எடுத்து பிரித்தான். அனைவரும் ஆவலுடன் அதை பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
அந்த பார்சலில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த அவன் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதில் குண்டு பாய்ந்து 6 பேர் பலியானார்கள். தகவல் தெரிந்து போலீசார் அங்கு வரவே, அவனும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
 
பலியானவர்களில் 4 பேர் பெண்கள். அவர்களது உடல்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதி முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேறு யாராவது பதுங்கி இருக்கிறார்களா? என்று போலீசார் சோதனை செய்தனர்.
 
கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்தவன் தீவிரவாதி என்று தெரிய வந்துள்ளது. அவனது பெயர், அவன் சார்ந்த இயக்கம் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
thedipaar.com
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: