
இந்திய எல்லலைப்பகுதியில் 200 அடி தூரத்திற்கு எல்லைச்சுவரினை சீனா ராணுவம் இடித்துதள்ளி சேதப்படுத்தியு்ள்ளது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளதாக ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்தார்.
இது குறித்து பாராளுமன்ற ராஜ்யசபாவில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின் போது எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியதாவது; இந்தியா-சீனா எல்லைக்கட்டுப்பாட்டு கோடு இரு நாடுகளுக்கும் பொதுவானதாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அப்படியிருந்தும், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவமான (பி.எல்.ஆர்) கடந்த ஜூலைமாதம் 13-ம் தேதியன்று இந்திய ராணுவம் ரோந்து சென்ற போது ,இந்தியாவின் அருணாச்சல்பிரதேச மாநிலம் தவாங் மாவட்டத்தில் உள்ள யாங்க்ட்ஸீ எல்லையில் கற்ச்சுவரினை , இடித்து தள்ளி சேதப்படுத்தியுள்ளது. இதனால் 250 மீட்டர் அளவுக்கு எல்லைச்சுவர் கற்கள் இடிந்து பெயர்ந்து போயியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது..இதன் மூலம் சீன ராணுவம் ( பி.எல்.ஆர்.) அத்துமீறி நுழைய முயன்றது. தற்போது சுவர் புனரமைக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவித்து , தொடர்ந்து இந்திய ராணுவம் கண்காணித்து வருகிறது.
இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் மொத்தம் 73 சாலைகள் உள்ளன. இச்சாலைகள் மிகவும் பதட்டமான ,முக்கியத்துமானவை என கண்டறியப்பட்டு அங்கு ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் உத்தர்க்காண்ட், ஹிமாச்சல்பிரதேஷ், அருணாச்சல்பிரதேசஷ், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் வளர்ச்சிக்கு, 10 ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது என்றார்
thedipaar.com