சென்னை : மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங்கை வரவேற்பதற்காக விமான நிலையம் வந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இருதயத்தில் அடைப்பு ஏதும் இருக்கிறதா என்பதை அறிய ஆஞ்சியோகிராம் சோதனை செய்தனர். பிறகு அமைச்சரின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். dinakaran.com