பெரிய ஆள் தோரணையில் இருப்பவர்கள்கூட இதுபோல திருட்டில் ஈடுபடுவார்கள் என்பதால் கண்டுபிடிப்பது கடினம்.
இதுபோன்ற நவீன கொள்ளையர்களை கண்டுபிடிக்க உதவியாக அவுஸ்திரேலிய முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சிலர் சேர்ந்து ‘ஹூ-டியூப்’ என்ற பெயரில் இணையத்தளம் தொடங்கியிருக்கிறார்கள்.
கடைகள், வர்த்தக நிறுவனங்களில் உள்ள கண்காணிப்பு கமெராவில் திருட்டு தொடர்பாக பதிவாகும் காட்சிகளை இந்த இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
திருடன் பற்றி தகவல்கள் தெரிந்தால் அதையும் பதிவு செய்து வைக்கலாம். இணையத்தளத்தை பார்க்கும் மற்ற கடைக்காரர்கள் உஷாராவதற்காக தான் இந்த வசதி.
இணையத்தளம் ஆரம்பித்து 3 மாதத்தில் மொத்தம் 127 காட்சிகளை பல பகுதிகளை சேர்ந்த கடைக்காரர்களும் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். இதன் உதவியுடன் 2 திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.