
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பிரிவு போலீசார் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டனர். இதையடுத்து போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகளும் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஜெயலிலதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி. திருமலைச்சாமி மாற்றப்பட்டார். அந்த இடத்திற்கு சென்னை அண்ணாநகர் உதவி கமிஷனராக இருந்த பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து தற்போது போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக இருந்த போலீசார் பலரும் மாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக அதிவிரைவு அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், போயஸ் தோட்டத்திற்கு வரும் அனைவரும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
thedipaar.com