
மலேசிய விமான நிலையங்களில் பயணிகள் வசதிக்காக தமிழில் அறிவிப்புகள் வெளியாகும் என்று அந்நாட்டு அரசு புதன்கிழமை தெரிவித்தது.
மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் காங் சோ ஹ, அடுத்த ஆண்டிலிருந்து கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலும், குறைந்த கட்டணத்தில் விமானங்கள் இயக்கப்படும் பிரிவுகளிலும் தமிழில் அறிவிப்புகள் செய்ய பரிந்துரைத்துள்ளார்.
அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் அரசு உணர்ந்துள்ளது. இந்த ஆண்டு கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு மட்டும் 4,34,050 பயணிகள் சென்னையிலிருந்து வந்துள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேர் ஆங்கிலத்தை விட தமிழையே புரிந்து கொள்கின்றனர். ஆங்கில உச்சரிப்பில் உள்ள வித்தியாசங்களே அதற்குக் காரணம். எனவே விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்பு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது என்று காங் தெரிவித்தார்.
மலேசியாவின் 2.7 கோடி மக்கள்தொகையில் 8 சதவீதம் பேர் இந்தியர்களாவர். அதிலும் தமிழர்களே அதிகம். தென்னிந்திய சுற்றலா விரும்பிகளுக்கும், தமிழகத்திலிருந்து வந்து வேலை பார்ப்பவர்களுக்கும் மலேசியாவே சிறந்த புகலிடமாக இருந்து வருகிறது..
thedipaar.com