கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு தனது நண்பர்களோடு மஞ்செஸ்டர் பகுதிக்குச் சென்றுள்ளார்.
இவரின் நண்பர்கள் அளித்துள்ள வாக்கு மூலங்களின் படி இரண்டு பேர் அனுஜிடம் நேரத்தினை வினாவியதாகவும் இதற்கு அனுஜ் பதிலளிக்கத் தாமதமாகியதாகவும் உடனே வந்த நபர்களில் ஒருவர் அனுஜின் தலையில் துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
பின்னிரவு 1.30 மணியளவில் செல்போர்ட் பகுதியில் வைத்தே சுடப்பட்டுள்ளார்.
நண்பர்கள் உடனே இவரை வைத்தியசாலைக்குத் தூக்கிச் சென்றபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இக்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கொலையின் காரணம் இனவெறித்தாக்குதலா அல்லது வேறு ஏதாவது தனிப்பட்ட காரணங்கள் உள்ளனவா என விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது இக்கொலையுடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அனுஜின் கொலைக்கு பேஸ்புக்கில் அனுதாபங்கள் குவிந்து வருகின்றன.
இன மதபேதமின்றி பலர் அனுஜின் கொலைக்கு தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
அவரின் பெற்றோரும் தமது மகனின் சடலத்தினைக் கூடிய விரைவில் தமக்குத் தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இங்கிலாந்திற்கு செல்வதே அனுஜின் கனவாக இருந்ததாகவும், அக்கனவே அவருக்கு எமனாக அமைந்து விட்டதாகவும் அவரின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
http://manithan.com