ஈரான்: கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட பெண்ணுக்கு கல்லடிக்குப் பதில் தூக்கு.


கள்ளத் தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணிற்கு கல்லால் அடிப்பதற்கு பதிலாக தூக்கில் போட்டு தண்டனை நிறைவேற்ற முடிவாகி உள்ளது. ஈரான் நாட்டின் கிழக்கு அஜர்பைஜான் பகுதியைச் சேர்ந்தவர் அஷ்தியானி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர், 2 ஆண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார்.

இதை அறிந்து கண்டித்த அவரது கணவரை, கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து 2005 ம் ஆண்டு கொலை செய்தார். இவரும், கள்ளக் காதலர்களும் கைது செய்யப்பட்டனர். அஜர் பைஜான் சிறையில் அஷ்தியானி அடைக்கப்பட்டுள்ளார். அங்குள்ள சட்டப்படி கள்ளத் தொடர்பில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்துக் கொன்று தண்டனை நிறைவேற்றப்படும். மற்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும்.

இதன்படி இவருக்கு 2006 ல் கல்லால் அடித்து கொல்லும் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. ஒரு வரை கல்லால் அடித்துக் கொல்வது காட்டுமிராண்டி தனம் என்று கண்டித்தன. இதையடுத்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. 

எனினும் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை அளித்தே ஆக வேண்டும் என்பதால், கல்லால் அடித்துக் கொல்லும் தண்டணைக்கு பதிலாக, தூக்கில் போட்டு தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப, ஏற்கனவே அளிக்கப்பட்ட உத்தரவிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. “கடும் குற்றத்தில் ஈடுபட்டவர், தண்டனையில் இருந்து எந்த வகையிலும் விலக்கு பெற முடியாது. எப்படியும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.

கள்ளத் தொடர்பில் ஈடுபட்ட அஷ்தி யானியின் மரண தண்டனை எந்த வகையிலாவது நிறை வேற்றப்பட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். அந்த வகையில், தூக்கில் போடுவதிலும் ஆட்சேபனை எழுப்ப போவதில்லை என்று உள்ளூர் நீதிமன்ற அதிகாரி ஒருவர் கூறினார். 
.thedipaar.com
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: