டிச.26, 2004,: வாரிச்சுருட்டி வாயில் போட்ட சுனாமி


ஏழு ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் இந்திய பெருங் கடலில் ஏற்பட்ட சுனாமியின் நினைவலைகள், என்றும் நீங்காத வடுவாக தொடர்கிறது.

அதற்கு முன் இந்த சொல் இந்திய மக்களிடையே பிரபலம் இல்லை. ஆனால் 2004, டிச., 26க்கு பின் மக்களால் அதிகமாக உச்சரிக்கப் பட்ட சொல் சுனாமி தான். இது ஜப்பானிய மொழிச் சொல். "துறைமுக அலை' எனப் பொருள். "ஆழிப் பேரலை' எனவும் அழைக்கப் படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து எழும்பிய ஆழிப் பேரலைகள், இந்தோனேசியா, இந்தியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தி மக்களை சோகத்தில் ஆழ்த்தின.

சாதாரணமாக தூங்கிக் கொண்டிருந்த கடல் அலைகள் அன்று கோபம் கொண்டு உயர்ந்து மேல் எழும்பின. மக்கள் நினைத்துப்பார்க்க முடியாத கொடூரத்துடன். சில நிமிடங்கள் நீடித்த கடல் கொந்தளிப்பு மிகப்பெரிய பேரழிவை இந்திய துணைக் கண்டத்தில் ஏற்படுத்தியது. இதில் 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர்வரை உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது. இது உலகின் மோசமான இயற்கை சீரழிவுகளில் 6வது இடம், என்ற சோகமான சாதனையை பெற்றது. உயிர்ச் சேதத்துடன், கோடிக்கணக்கான ரூபாய்க்கு பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது.

தமிழகம் அதிகம்: இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சுனாமி தாக்கியது. இந்தியாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியா கினர். தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் இறந்தனர். தமிழக கடலோர மாவட்டங் களான சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்படபல மாவட்டங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டன. கடலை நம்பி வாழ்ந்த மீனவ குடும்பங்கள், கடற்கரை பகுதி யிலுள்ள வழிபாட்டு தலங்களில் நேர்த்திக்கடன் செலுத்த மற்றும் சுற்றுலா சென்றவர்கள் என குடும்பம் குடும்பமாக பலியாகிய சம்பவம் இன்றும் நெஞ்சை விட்டு அகலவில்லை.

காரணம் என்ன: பூகம்பம் மூன்று விதங்களில் ஏற்படுகிறது. தரைப் பகுதியில் ஏற்படும் போது, நிலம் பிளவுபட்டு கட்டடங்கள் தரைமட்ட மாகின்றன. மலைப்பகுதியில் ஏற்படும் போது எரிமலை உருவாகிறது. இதுவே கடலில் பூகம்பம் ஏற்படும் போது, சுனாமி எனும் ஆழிப்பேரலைகள் உருவாகின்றன. ஆழிப்பேரலையின் வேகம் ஆரம் பித்த இடத்திலிருந்து, கரையை நெருங்க, நெருங்க அதிகரிக்கும். சாதாரண மாக கடல் அலையின் உயரம் 7 அடி எழும்பும். கடல் கொந்தளிப்பாக இருந்தால் 10 அடி இருக்கும். ஆனால் அன்றைய தினம் இந்த அலைகள், 100 அடி உயரத்துக்கு எழும்பின. சுனாமி, சில வினாடிகளில் அதிக கொள்ளளவு தண்ணீரை கரைப்பகுதியில் தள்ளுகிறது.

எச்சரிக்கை கருவி: சுனாமியை தடுக்க முடியா விட்டாலும், அது வரும் முன் கண்டறிந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர வைக்கலாம். கடலில் பூகம்பம் ஏற்பட்டவுடன் ஆழிப் பேரலைகள் உருவாகின்றனவா என்பதை கண்டறிய, சுனாமி எச்சரிக்கைக்கருவிகள் பெருங்கடல்களில் அமைக்கப் பட்டுள்ளன. இது கடலில் நீர் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கும். இதன் அடிப்படையில் அலைகளின் மாற்றத்தை விஞ்ஞானிகள் அறிந்து, பாதிப்பை ஏற்படுத்துவதாக உணர்ந்தால் எச்சரிக்கை தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கின்றனர். இதனால் ஏற்படப் போகும் அழிவின் அளவை வெகுவாக குறைக்கலாம். 2004 சுனாமிக்கு பின் இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கைக் கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன. 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: